×

கொடிகள் நட்ட 120 நாட்களில் பறிக்க ஆரம்பிக்கலாம் கரூர் பகுதியில் அமராவதி ஆற்று மீன் விற்பனை அமோகம்

கரூர்: கரூர் பகுதியில் அமராவதி ஆற்றில் பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். ஜிலேபி கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமீபகாலமாக பொதுமக்களிடம் நல்ல சத்தான உணவுகளை தேடிப் பிடித்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அனைத்து மக்களுக்கும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் அமராவதி ஆற்றில் ஆண்டாங்கோவில் தடுப்பணை, பசுபதிபாளையம் பாலம் அருகே, லைட் ஹவுஸ் கார்னர் பகுதிகளில் அமராவதி ஆற்றின் ஆழமான பகுதிகளில் பொதுமக்கள் விரும்பி உண்ணக்கூடிய நாட்டு விரால், கெண்டை மீன் ,நாட்டுப் பாறை, ஜிலேபி மீன் மற்றும் கொக்கு மின் அதிக அளவில் மீனவர்களால் வலை வைத்தும், கூண்டு வைத்தும் மீன்கள் பிடிக்கப்படுகிறது.

இவ்வாறு பிடிக்கும் மீன்களை, கரூர் சர்ச் கார்னர் திருவள்ளூர் மைதானம் அருகில், லைட் ஹவுஸ் கார்னர் , வஞ்சி அம்மன் கோயில் சந்து கரூர் காமராஜர் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஜிலேபி மீன் கிலோ ரூ.120 க்கும், நாட்டுவிரால் கிலோ ரூ.500 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களும் மீன்களை தரத்தின் தன்மைக்கு காசு கொடுத்து வாங்கி செல்கின்றனர். ஆற்றில் மீன்கள் பிடிக்கப்பட்டு, உடனுக்குடன் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மீன்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

Tags : Karur ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...