காஞ்சி கிருஷ்ணா கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் காஞ்சி  கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நேரு யுவகேந்திரா ஆகியவை இணைந்து “உலக மகளிர் தின விழா” நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விழாவில், காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் பா.போஸ் தலைமை தாங்கினார். தாளாளர் அரங்கநாதன், தலைவர் ஜெயக்குமார், செயலாளர்.தயாளன், பொருளாளர் மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், முதல்வர் வெங்கடேசன் “மகளிரும் வாழ்வியலும்” எனும் தலைப்பில் பெண்களின் சுதந்திரம், சகோதரத்துவம், மனிதநேயம், பெண்கல்வி, பெண்களின் ஆளுமைப் பண்புகளை மேற்கோள்காட்டி பெண்ணியம் குறித்து பேசினார்.

உலக மகளிர் தினத்தினையொட்டி, கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் நடனப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், மகளிரை போற்றும் விதமாக கல்லூரியில் உள்ள அனைத்து மகளிர்களுக்கும் பரிசுகள் வழங்கி, மகளிர் தினம் விழா வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக, துணை முதல்வர் ம.பிரகாஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Related Stories: