சென்னை பையனூர் திரைப்பட நகரத்தில், கலைஞருக்கு சிலை அமைக்கப்படும் இடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நேரில் ஆய்வு செய்தனர். சென்னை அருகே பையனூரில் கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, திரைப்பட தொழிலாளர் அமைப்பான பெப்சி உறுப்பினர்களுக்கான குடியிருப்பு, தயாரிப்பாளர்கள் குடியிருப்பு, இயக்குநர்களுக்கான குடியிருப்பு, நடன கலைஞர்கள் குடியிருப்பு, திரைப்பட ஸ்டுடியோ, டப்பிங் கூடம் ஆகியவை அமைக்க 100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் இப்பணிகள் கிடப்பில் பேடப்பட்டன. இந்நிலையில், திமுக ஆட்சி மீண்டும் ஏற்பட்டதை அடுத்து, குடியிருப்பு பணிகளை மீண்டும் தொடங்கவும், திரைப்பட படப்பிடிப்புகளை நடத்தவும், திரைப்பட துறையினர் முடிவு செய்துள்ளனர்.