×

கல்குவாரி கருத்து கேட்பு கூட்டம் ரத்து

திருப்பூர், மார்ச் 11:திருப்பூர் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் கோடாங்கிபாளையத்தில் புதிய 4 கல்குவாரிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக நேற்று கருத்துக்கேட்புக் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடந்தது.
 இதில்,  சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம், விவசாயிகள் சங்கம் மற்றும் கோடாங்கிபாளையம், இச்சிபட்டி  மற்றும் பூமலூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் பெண்கள் பங்கேற்றனர். அதேபோல் குவாரிதரப்பில் ஏராளமானோர் பங்கேற்றனர். 84 ஏக்கரில் அமைய உள்ள 4 குவாரிகளுக்கான திட்ட அறிக்கையை குவாரி உரிமையாளர்கள் சமர்ப்பித்தனர். தொடர்ந்து பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. கல்குவாரிக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருவேறு தரப்பினர் என சுமார் 400க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கூச்சம், குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து கருத்துக்கேட்புக்கூட்டத்தை ரத்து செய்வதாக  கலெக்டர் வினீத் அறிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

Tags : Kalquarie ,
× RELATED மறு கரைக்கு நீந்தி செல்வதாக...