×

குன்னூர் நகராட்சி 12வது வார்டில் வளர்ச்சி திட்ட பணிக்கு பூமி பூஜை

குன்னூர், மார்ச் 11:  குன்னூர் நகராட்சி 12வது வார்டில் நேற்று சுமார் 70 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் கழிவு நீர் கால்வாய் நடைபாதை இன்டர்லாக் கற்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதனை முன்னாள் நகர மன்ற தலைவர் நகர செயலாளர் ராமசாமி, நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், குமரேசன், ராஜேந்திரன், நகர இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன், நகர துணை செயலாளர் முருகேசன், கிளை செயலாளர் சிக்கந்தர், சண்முகம், நந்தகுமார் அப்துல் காதர் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, நாராயணன், பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Bhoomi Pooja ,Coonoor Municipality 12th Ward ,
× RELATED நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில்...