×

தாய் மொழியில் கல்வி இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்

ஆலங்குடி, மார்ச் 11: கல்வி தாய்மொழியில் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசினார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் தனியார் பள்ளியின் புதிய கட்டிடத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வகுப்பறை, கணினி அறை கட்டிடங்களைத் திறந்து வைத்தார். இந்த விழாவின்போது செய்தியாளர்களிடம் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:

கல்விதான் தனி மனிதனுடைய உயர்வுக்கும் குடும்பத்திற்கும் நாட்டினுடைய உயர்வுக்கும் அடுத்த கட்ட நிலைக்குப் போக வேண்டுமென்றால் கல்வி அவசியம், அந்தக் கல்வியின் தாய் மொழியில் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அந்த தாய்மொழி மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக இருக்கக்கூடிய தமிழ் மொழி. ஆங்கிலம் என்பது ஊடக மொழி தான். இன்னொருவருடன் பேசும்போது அதை பயன்படுத்திக் கொள்ளலாம். அதை பின்னால் வைத்துக் கொள்ளலாம். ஆனால் சிந்திப்பது கட்டாயம் தாய்மொழியாக இருந்தால் அது சிறப்பாக இருக்கும்.

இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கக்கூடிய நாள் கூடிய சீக்கிரம் வரவேண்டும். முதன் முதலில் மனிதர்கள் விண்வெளிக்கு செல்கிறார்கள் என்றால் அதை தாண்டி சத்ரியன் 3 பத்திரமாக இறங்குதல் என இரண்டு தொழில்நுட்பத்தையும் நாம் அடைய வேண்டும். அதை அடைந்த பிறகு அதற்கான பயணங்கள் அமையும். பூமி வெப்பமயமாவது தடுப்பது நம் கையில் தான் உள்ளது. வெப்பம் அதிகமாவதற்கு அடையாளங்கள் இருக்கிறது. அதற்கு தகுந்தார் போல் மாசு கட்டுப்பாடுகளை சரியாக பண்ண வேண்டும். மாசு கட்டுப்பாட்டை தாண்டி உள்ள வா கனங்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட மாசு கட்டுப்பாட்டிற்கு நம்மால் முடிந்தவரை வெப்பத்தை உருவாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது என்று கூறினார்.

Tags : Thai ,
× RELATED தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 6...