×

வனவிலங்குகளை வேட்டையாடினால் குற்றம் பெரம்பலூரில் விழிப்புணர்வு பிரசார பயண வாகனம்

பெரம்பலூர்,மார்ச் 11: பெரம்பலூரில், வன விலங்குக ளை வேட்டையாடினால் குற்றம் என வலியுறுத்தி பெரம்பலூர் வனக்கோட்டம் சார்பாக விழிப்புணர்வுப் பிரசார பயண வாகனத்தை மாவட்ட வனஅலுவலர் குகனேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு வனத்துறையின், பெரம்பலூர் வன க்கோட்டம் சார்பாக, வன உயிரின (பாதுகாப்பு) சட்டம் 1972 பிரிவு 9 மற்றும் 51ன் படி, முயல், மான், மயில், காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகளை வேட்டையா டுவது தண்டனைக்குரிய குற்றம். வனத்துறையிடம் விவசாயிகள் இலவசமாக தேக்கு, சவுக்கு, மகாகணி, செம்மரம், புங்கன், வேம்பு ஆகிய மரக்கன்றுகளைப் பெற்றுப் பயன்பெறலாம் என்பன போன்ற விழிப்பு ணர்வுப் பிரச்சார பயண வாகனம் நேற்று(10ம்தேதி) காலை மாவட்டத்தின் பல் வேறு கிராமங்களுக்கு செ ன்றது. இந்த விழிப்புணர்வுப் பிரசார பயண வாகனத் தைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் மாவ ட்ட வனஅலுவலர் அலுவல கத்தில் நடைபெற்றது.

திருச்சி வன பாதுகாப்புப் படையின் வனப் பாதுகாவ லர் நாகையா முன்னிலை யில் பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் விழிப்புணர்வுப் பிரசார பயண வாகனத்தைக் கொடியசைத்து தொடங்கி வை த்தார். நிகழ்ச்சியில் வனச் சரகர்கள் (பெரம்பலூர் வன ச்சரகம்) பழனிகுமரன், (சமூ கக்காடுகள் வனச்சரகம்) சுப்ரமணியன், வனவர்கள் குமார், பிரதீப்குமார், சுப்ரம ணியன், சக்திவேல், வனக் காப்பாளர்கள் ராஜூ, அன் பரசு, மணிகண்டன், வனக் காவலர்கள் ஆகியோர் உட னிருந்தனர். விழிப்புணர்வுப் பிரச்சார பயண வாகனத்தில் வனக் காப்பாளர்கள் ராஜூ, அன் பரசு, வனக்காப்பாளர்கள் சவுந்தர்யா, ஜீவிதா ஆகி யோர் பெரம்பலூர், லாடபு ரம், மேலப்புலியூர், களரம்ப ட்டி, குரும்பலூர்,பாளையம், செஞ்சேரி, ஆலம்பாடி, கோ னேரிப்பாளையம், எசனை, களரம்பட்டி, சத்திரமனை, வேலூர், செட்டிக்குளம் உள் ளிட்டப் பல்வேறு கிராமங்க ளுக்குச்சென்று விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்குகின்றனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி