இலுப்பூர் திரவுதியம்மன் கோயில் கும்பாபிஷேக ஓராண்டு நிறைவு

கீழ்வேளூர், மார்ச் 11: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த இலுப்பூர் திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று முதலாம் ஆண்டு பூர்த்தி சம்மஸ்கார அபிஷேகம் மற்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேகம் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று காலை அனுக்ஞை, வினாயகர் வழிபாடுடன் யாகபூஜை தொடங்கியது. கோபூஜை நடைபெற்று மகா யாக பூஜை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று மகா அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களுக்கு அனனதானம் வழங்கப்பட்டது. மாலை பெண்கள் கலந்து கொண்ட 101 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: