கோடியக்காடு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்புவிழா

வேதாரண்யம், மார்ச் 11: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், கோடியக்காடு ஊராட்சியில் ரூ.23.56 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தேசியக்கொடி ஏற்றி வைத்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், ராஜு, ஒன்றிய பொறியாளர், மணிமாறன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன், ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன்,

கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான், சுந்தரம், உதவிதொடக்க பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. புதிய ஊராட்சி மன்ற கட்டிட திறப்பு விழாவையொட்டி முதல் நாள் இரவு ஊராட்சி மன்ற கட்டிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Related Stories: