கரூர் மாநகராட்சி கேவிபி நகரில் ஞானஸ்கந்தன் கோயிலில் கும்பாபிஷேக விழா

கரூர், மார்ச் 11: கரூர் மாநகராட்சி கேவிபி நகரில் ஞானஸ்கந்தன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கரூர் மாநகராட்சி கேவிபி நகரில் ஞானஸ்கந்தன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, திருபணிக்குழு தலைவர் விஷ்ணு. பி. சண்முகம், செயலாளர் மணீஷ்.கே மகேஸ்வரன்,பொருளாளர் எஸ். பழனிச்சாமி மற்றும் கோயில் நிர்வாக குழு கமிட்டி உறுப்பினர்கள், கேவிபி நகர், கணேசா நகர், விஜயநகர், சோளியம்மன் நகர், பெரியார் நகர் ஞானஸ்கந்தன் கோயில் அறக்கட்டளை குழு சார்பில் மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நிருதி கணபதி, ஆலய கணபதி, சத்ய நாராயணர், ஆஞ்சநேயர், துர்க்கை, நவக்கிரகங்களுடன் கூடிய தட்சிணாமூர்த்தி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய மற்றும் திருமேனிகள் பைரவர், கொடிமரம், திருத்தேர் ஆகிய திருப்பணிகள், ஆகாய விமானம் வர்ண வேலை செய்ய முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேக விழா தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக 8 ம் தேதி காவிரி ஆறு கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் கொண்டு வந்து கோயிலில் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, முதற்கால பூஜைவும் மங்கள இசை புண்ணியாகம், விநாயகர் வழிபாடு, தீபாரதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நீரை செல்லக்கபிலசிவாச்சாரியார் தலைமையில் யாகசாலையில் வைத்து 108 வகையான நறுமணப் பொருட்கள் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. புனித நீர் இருந்த குடத்தை மேள முழக்கத்துடன் கொண்டு சென்று ஞானஸ்கந்தன் கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து தீபாராதனையும், தொடர்ந்து பக்தர்களுக்கு புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கொங்கு கல்வி அறக்கட்டளை செயலாளர் விசா.சண்முகம், சேரன் டிரான்ஸ்போர்ட் கே.ராஜேந்திரன், கரூர் தீபா கண்ணன் தலைமை டாக்டர் என். ராமசாமி, சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு டாக்டர் நிரேஷ் கண்ணன்,

மாமன்ற உறுப்பினர்கள் ஆர். ஸ்டீபன்பாபு, சாலை ரமேஷ், நாவல் எக்ஸ்போர்ட் நாவல் பாலு, அரவிந்த் ஏ டெக்ஸ் ஜெயராமன், வி ஆர் கே அரிசி மண்டி வி ஆர் கே.கந்தசாமி, கே.மணிராம், பரணி மேட்சிங் சண்முகம், சக்தி மருத்துவமனை டாக்டர்கள் சக்திவேல், சுபாஷினி, நீல் டெக்ஸ் ரவிசந்திரன், மாவட்ட திமுக சுசீந்திரன், வாட்டர் கேர் மகாமுனி, அக்க்ஷரா கிட்ஸ் நிர்வாகிகள் சக்திவேல், செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் விஷ்ணு ஜுவல்லரி பி.சண்முகம் தலைமையில் கோயில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கேவிபி நகர் நல குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Related Stories: