ராஜபாளையம் கல்லூரியில் இயற்கை பேரிடர் பயிற்சி முகாம்

ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் இயற்கை பேரிடர் பயிற்சி முகாம், மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் சிவானந்தா ஆசிரமத்தில் நடைபெற்று வருகிறது. மருத்துவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ராஜூக்கள் கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் முகாமை தொடங்கி வைத்தார். ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் ரமேஷ்குமார்,  இளையோர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சத்ய சாய் சேவா நிறுவனத்தின் பேரிடர் மீட்பு குழுவின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு, பயிற்சியை அளித்தார்.  இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியில் சத்ய சாய் சேவா நிறுவனத்தில் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: