வத்திராயிருப்பில் வங்கி முன்பு காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

வத்திராயிருப்பு: ஒன்றிய அரசை கண்டித்து வத்திராயிருப்பில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசு எஸ்பிஐ, எல்ஐசி சொத்துக்களை அதானிக்கு தாரைவார்க்கும் செயலைக் கண்டித்து வத்திராயிருப்பு ஸ்டேட் வங்கி முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் லட்சுமனன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரெங்கசாமி, மாவட்ட பொருளாளர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் அறியும் சட்டத்துறை மாநில துணைத்தலைவர் சுந்தரம், வழக்கறிஞர் காளிதாஸ், சந்திரசேகர், திருவில்லிபுத்தூர் வட்டாரத் தலைவர் முருகராஜ், முன்னாள் வட்டாரத்தலைவர் அழகர்சாமி, ஆசைத்தம்பி, செல்வம், வைரம், முத்தையா, கருப்பசாமி, ஜெயராஜ் பெருமாள், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோசம் எழுப்பினர்.

Related Stories: