×

திருப்புத்தூர் அருகே முத்து முனியையா கோயில் கும்பாபிஷேக விழா

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே வெளியாரி கிராமத்தில் நேற்று  முத்து முனியையா சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி காலையில் அனுக்ஞை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி நடந்தன. அன்று மாலை முதற்கால ஜெபவேள்வி, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. மார்ச் 8ம் தேதி காலையில் சந்தியாவந்தனம், பாபனாபிஷேகம், 2ம் கால ஜெபவேள்வி, பூர்ணாகுதி, தீபாராதனை, வேதங்கள் திருமுறை ஆசீர்வாதம், திருவருள் பிரசாதம் வழங்குதல் நடந்தது. நேற்று காலையில் மண்டப சாந்தி சுவாமிகள் காப்பு கட்டுதல், கோமாதா பூஜை, லட்சுமி பூஜை, 4ம் கால ஜெபவேள்வி பூர்ணாகுதி, தீபாராதனை, வேதபாராயணம், திருமறை ஆசிர்வாதம் திருவருள் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. தொடர்ந்து 9.40 மணியளவில் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது. காலை 10.35 மணியளவில் மூலஸ்தான விமானத்திற்கும், முன்கோபுரத்திற்கும் யாக புனிநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம், பட்டு சாத்துதல் திருவருள் பிரசாதம் வழங்குதல் நடந்தது. இவ்விழாவில் வெளியாரி, கண்டமாணிக்கம் திருப்புத்தூர், பட்டமங்கலம், பண்ணைத்திருத்தி, கொங்கரத்தி தெற்கு நயினார்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை வெளியாரி நகரத்தார்கள், வெளியாரி ஊரார்கள் மற்றும் தெற்கு நயினார்பட்டி கிராமத்தார்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.Tags : Muthu Muniyaiya temple ,Tiruputhur ,
× RELATED சிவன் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பு வழிபாடு