×

திருப்புல்லாணி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

கீழக்கரை: திருப்புல்லாணி அருகே தில்லையேந்தல் ஊராட்சி கீழத்தில்லையேந்தல் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் விதமாக மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி, குடற்புழு நீக்க சிகிச்சை, பசுக்களுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல் சிகிச்சை அளிக்கப்பட்டது. தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. பசு. கன்று அணிவகுப்பு நடத்தப்பட்டு சிறந்த கலப்பின கிடாரி கன்றுகளுக்கு பரிசு, சிறந்த கால்நடை வளர்ப்போருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. கால்நடை நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ராமநாதபுரம் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன், கீழக்கரை கால்நடை உதவி மருத்துவர் ஜெயபிரகாஷ், கால்நடை ஆய்வாளர் கங்கா தேவி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் துரோபதை, பிரியா ஆகியோர் அடங்கிய குழுவினர் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். 900 ஆடுகள், 119 மாடுகள் மற்றும் இதர கால்நடைகளுக்கு இம்முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags : Tirupullani ,
× RELATED பெண்கள் சுய தொழிலில் ஈடுபட வேண்டும்: கலெக்டர்