மேலூர் பெண் போலீசார் மகளிர் தின கொண்டாட்டம்

மேலூர்: மேலூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பெண் போலீசார் மகளிர் தின விழாவை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். மேலூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மேலூர், கீழவளவு, மேலவளவு, கொட்டாம்பட்டி, அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து, மதுவிலக்கு உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் பெண் போலீசார் சுமார் 40க்கும் மேற்பட்டோர் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக மேலூர் டிஎஸ்பி ஆர்லியஸ் ரெபோனி பங்கேற்று பெண் போலீசாரின் செயல்பாடுகள் குறித்து பாராட்டி பேசினார். அதனைத் தொடர்ந்து மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி மகளிர் போலீசார் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Stories: