×

திண்டுக்கல் ராஜக்காபட்டியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகேயுள்ள ராஜக்காபட்டியில் செவாலியர் அகாடமி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் ஊராட்சி அலுவலகம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஆரோக்கிய பிரபு தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ரோஸ்லின், துணை முதல்வர் ஞானசீலா முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பராசக்தி முருகேசன் விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்தார். ஊர்வலம் பள்ளியில் துவங்கி ராஜக்காப்பட்டியில் உள்ள முக்கிய வீதி வழியாக வந்து ஊராட்சி அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் போதை பழக்கம் உன்னை உயிரோடு தின்று விடும், போதை பழக்கத்தை கைவிட வேண்டும் என பல வகையான போதைகளின் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தியும், போதை பழக்கவழக்கத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பியும் சென்றனர். இதில் பாதிரியார்கள் பீட்டர் பிரான்சிஸ், பிரிட்டோ, அஸ்வின், அந்தோணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.Tags : Dindigul Rajakapatti ,
× RELATED புளியங்குடியில் கார் திருடிய இருவருக்கு ஓராண்டு சிறை