பழநி பாலசமுத்திரத்தில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பழநி: பழநி அருகே பாலசமுத்திரத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பகத்சிங் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சமையல் காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க கூடாது. 100 நாள் வேலைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க கூடாது. மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் சலுகைகளை குறைக்க கூடாது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஒன்றிய செயலாளர் கண்ணுச்சாமி, ஒன்றிய பொருளாளர் பாலக்குமார், நகர செயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: