திண்டுக்கல்லில் அன்னதானம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் விஸ்வகர்ம மகா ஜன சபா மண்டபத்தில் அனர்த சுவாமிகள் மடம் மற்றும் அக்கசாலை விநாயகர் கோயில் பவுர்ணமியை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. அக்கசாலை விநாயகர் கோயில் தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். செயலாளர் கோவிந்தன், பொருளாளர் ராஜேந்திரன், மனோகர் முன்னிலை வகித்தனர். விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் கந்தசாமி, செயலாளர் ஆனந்தன் அன்னதானத்தை துவங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை துணை செயலாளர்கள் கணேசன், சின்னு செய்திருந்தனர். காளிராஜ் நன்றி கூறினார்.

Related Stories: