சவுரிபாளையம் சக்தி மாரியம்மன் கோயிலில் தீ மிதி விழா

இடைப்பாடி:  இடைப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சி ஊராட்சி சவுரிபாளையத்தில் சக்தி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா கடந்த 13ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று தீமிதி விழா நடந்தது. இதில் முதலில் பூசாரி கரகத்தை எடுத்து தீ மிதித்தார். அதைத்தொடர்ந்து காணியாசிக்காரர்கள் மற்றும் பக்தர்கள் வரிசையாக குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் 3000க்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில்  அருள் பாலித்தார். தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து ஆடு கோழிகள் பலியிடப்பட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரலேகா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: