×

அணைமேடு ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் சுறுசுறுப்பு

சேலம்: சேலம் அணைமேடு ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.  சேலம் மாநகரத்ைதயொட்டி சேலம்-விருத்தாசலம் ரயில் வழித்தடம் செல்கிறது. இதனால் நகரின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் செல்வதற்கு மக்கள் பொன்னம்மாப்பேட்டை, அணைமேடு, முள்ளுவாடி கேட் ஆகிய இடங்களில் உள்ள ரயில்வே கேட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மூன்று பாதைகளிலும் முள்ளுவாடி, அணைமேடு ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதில் முக்கியமாக சேலத்தை கிழக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களுடன் இணைக்க கூடியதாக அணைமேடு ரயில்வே கேட் உள்ளது. குறிப்பாக சேலத்தில் சென்னை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், ஆத்தூர், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை உள்பட பல ஊர்களுக்கு அணைமேடு ரயில்வே கேட் வழியாக தான் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் சேலம்-விருத்தாசலம் ரயில் வழித்தடத்தில் ரயில்கள் வரும்போது எல்லாம் கேட்டுக்கள் மூடப்படுகிறது. அப்போது இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்த வேண்டி இருக்கிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அணைமேட்டில் நூற்றுக்கணக்கான வாகனகங்கள் அணிவகுத்து நின்றுவிடுகிறது. இதனால் சேலம் வாசிகள் மட்டுமில்லாமல், வெளியூர் பயணிகளும் கடுமையாக பாதிக்கின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், அணைமேட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2016ம் ஆண்டு திட்டமிடப்பட்டு இருந்தது. நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியாக கட்டுமான பணிகள் கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கப்பட்டது. மேம்பாலப்பணி ரூ.92 கோடியில் நடைபெறுகிறது. மேம்பாலத்திற்காக 15 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று கான்கிரீட் மேல்தளம் அமைக்கும் பணி சுறுசுறுப்பாக நடந்தது.

Tags : Dammedu ,
× RELATED அணைமேடு ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் சுறுசுறுப்பு