தர்மபுரி: தர்மபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் எட்வின் ஜார்ஜ் தலைமை வகித்தார். ஆஞ்சலோ ஜோசப் வாழ்த்தி பேசினார். துணை முதல்வர் பாரதி பெர்னாட்ஷா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தர்மபுரி மாவட்ட நீதிமன்ற வக்கீல்கள் சண்முகப்பிரியா, சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு, இன்றைய சூழலில் பெண் கல்வியின் அவசியம், பெண்கள் அனைத்து துறைகளிலும் பெற்றிருக்கும் வளர்ச்சி, எதிர்கால சமூகத்தில் பெண்கள் அடைய வேண்டிய முன்னேற்றம் குறித்தும் பேசினர். நிகழ்ச்சியில் பொருளாளர் ஜான், சமூக பணித்துறை உதவிப்பேராசிரியர் ஆண்டனி கிஷோர், உதவி பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மகளிர் தினத்தையொட்டி பேச்சு, கவிதை, ஓவியம், கட்டுரை போட்டிகள் கல்லூரி வளாகத்திலும், மனிதச்சங்கிலி பேரணி சோகத்தூர் கூட்ரோடு முதல் அக்சிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரையிலும் நடந்தது. இப்பேரணியில் தொன்போஸ்கோ கல்லூரி மாணவிகளும், அக்சிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து சமூகப்பணித்துறை மாணவ, மாணவகளின் பெண் வாழ்வியல் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் நடந்தது. ...