அரசு பள்ளியில் இலக்கிய திருவிழா

கடத்தூர்: கடத்தூர் அருகே நல்லகுட்லஅள்ளி நடுநிலைப்பள்ளியில் கிளை நூலகம், தகடூர் புத்தகப்பேரவை இணைந்து இலக்கிய திருவிழாவை நடத்தியது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சென்னகிருஷ்ணன் தலைமை வகித்தார். கடத்தூர் கிளை நூலகர் சரவணன், தர்மபுரி மாவட்ட தமிழ் கவிஞர் மன்ற தலைவர் பாவலர் மலர்வண்ணன் முன்னிலை வகித்தனர். நூல் அறிமுக போட்டி, திருக்குறள் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் மகேந்திரன், முருகன் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். தர்மபுரி குறள்நெறி பேரவை அமைப்பாளர் புலவர் பரமசிவம் பேசினார். நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பட்டதாரி ஆசிரியர் வேல்முருகன் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் நேதாஜி நன்றி கூறினார்.

Related Stories: