செங்கம் நகரின் புறவழி சாலைக்கு நில ஆர்ஜிதம் செய்ய அளவீடு கற்கள் பதிக்கும் பணி தொடக்கம்: டிஆர்ஓ நேரில் ஆய்வு

செங்கம், மார்ச் 10: செங்கம் நகரின் புறவழி சாலைக்கு நில ஆர்ஜிதம் செய்ய அளவீடு கற்கள் பதிக்கும் பணி தொடங்கியது. மேலும் இதற்கான இறுதி கட்ட பணிகளை டிஆர்ஓ பிரியதர்ஷினி நேரில் சென்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரின் பிரதான புறவழி சாலை இன்றி கடந்த பல ஆண்டுகளாக செங்கம் நகர பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரியை ஆதரித்து திமுக தலைவரும் தற்போதைய முதல்வருமான மு.க. ஸ்டாலின் முக்கிய தேர்தல் வாக்குறுதியை பொதுமக்களுக்கு அளித்தார்.

அதில் முக்கியமான வாக்குறுதி செங்கம் நகருக்கு புறவழி சாலை அமைத்தே தீர்வோம் என்று வாக்குறுதி அளித்து தற்போது அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, புற வழி சாலை அமைக்க அரசாணை வெளியீடு பணிகள் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக போளூர் சாலை ராமகிருஷ்ணா ஆசிரமம் முதல் மண்மலை கிராமப்புறத்தில் புதுச்சேரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலையில் புறவழி சாலை இணைக்க 3 கிலோ மீட்டர் தூரம் புறவழிச்சாலைக்கு தேவையான இடங்களை முறையாக பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்யும் பணிகள் ஏற்கனவே நடைபெற்றது. இந்நிலையில் இறுதி கட்டமாக நில ஆர்ஜிதம் மற்றும் அளவீட்டு கற்கள் பதிப்பது இடங்களை வருவாய் துறை கையகப்படுத்துவது, மதிப்பீட்டு போன்ற பணிகள் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமையில் அதிகாரிகள் பணிகளில் ஈடுபட்டனர்.

கோட்டாட்சியர் மந்தாகினி நெடுஞ்சாலைத்துறை, உதவி செயற்பொறியாளர் நாராயணன், தாசில்தார் முனுசாமி தலைமை நிலை அளவையர் வெங்கடேசன் தலைமையிட துணை வட்டாட்சியர், தமிழரசி சமூக பாதுகாப்பு தாசில்தார் ரேணுகா, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாரதி, மண்மலை ஊராட்சி மன்ற தலைவர் பாலு, கூட்டுறவு சங்க தலைவர் அன்பழகன் மற்றும் வருவாய் துறையினர் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உட்பட புறவழி சாலை அமைக்கும் பணிக்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். செங்கம் அருகே மண்மலை கிராமத்திலிருந்து போளூர் சாலை ராமகிருஷ்ணா ஆசிரமம் பகுதியில் ச3 கிலோ மீட்டர் தூரம் புறவழி சாலை அமைக்க உள்ள இடத்தினை டிஆர்ஓ பிரியதர்ஷினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கோட்டாட்சியர் மந்தாகினி தாசில்தார் முனுசாமி.

Related Stories: