×

சுவாமிமலையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

கும்பகோணம், மார்ச் 10: கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இவாஸ் நல சங்கம், காவல்துறை சார்பில் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. சாலை விதிகளை பின்பற்றாததாலும், ஹெல்மெட் அணியாததாலும் இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளில் அதிகளவில் உயிரிழப்புகளும், உடல் ஊனமும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹெல்மெட் அணிய வேண்டும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிமலை காவல்துறை, இவாஸ் நல சங்கம் மற்றும் குடந்தை இரத்ததான டிரஸ்ட் இணைந்து நடத்திய தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ. செந்தில் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியை கும்பகோணம் டிஎஸ்பி மகேஷ்குமார் தொடங்கி வைத்தார். தெப்பக்குளத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தெப்பக்குளத்தில் முடிவடைந்தது. பேரணியில் ஏராளமானோர் பங்கேற்று, விபத்தில்லா பயணம், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் இயக்குவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி சென்றனர். பேரணியில் சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவகுமார், துணைத்தலைவர் சங்கர், செயல் அலுவலர் உஷா, ரத்த தானம் டிரஸ்ட் அறங்காவலர் சுலைமான் சேட்டு, இவாஸ் நல சங்கம் நிர்வாக குழு அப்துல் மாலிக் மற்றும் போலீசார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Helmet Awareness Rally ,Swaamimalayan ,
× RELATED உத்திரமேரூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி