×

விராலிமலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சந்தித்து பேசிய டிஐஜி

விராலிமலை. மார்ச் 10: விராலிமலையில் பகுதியில் பணியாற்றி வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருச்சி டிஐஜி சரவண சுந்தர் சந்தித்து கலந்துரையாடினார். விராலிமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட சிறிய பெரிய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன இதில் உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமின்றி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாடகை அறை எடுத்து ஆங்காங்கே தங்கி பணியாற்றி வருகின்றனர் இந்த நிலையில் நேற்று அவர்களை சந்தித்த திருச்சி மத்திய மண்டல காவல் துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் அவர்களிடம் கலந்துரையாடினார்.

இதில் அவர்களிடம் பாதுகாப்பு குறித்து கேட்டிருந்தார் மேலும் தமிழர்களால் ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என்றும், பணியாற்றுவதில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்றும், உணவுப் பொருட்கள் வாங்கும் போது ஏதேனும் தொந்தரவு உள்ளதா என்றும் கேட்டறிந்தார் இதற்கு பதில் அளித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழர்களால் எந்தவித தொந்தரவும் இல்லை நாங்கள் அவர்களுடன் இணக்கமாக பழகி வருகிறோம். அவர்களும் எங்களுடன் இணக்கமாக பழகி வருகிறார்கள் ஒருவருக்கொருவர் அண்ணன், தம்பி உறவினர்கள் போல் பழகி வருகிறோம் இதுகுறித்து எங்கள் குடும்பங்களுக்கும் கைப்பேசி மூலம் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் அனுப்பியுள்ளோம் எனவே தமிழர்களால் எந்தவித தொந்தரவும் எங்களுக்கு இல்லை என்று மகிழ்ச்சி பொங்க அவரிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி சரவண சுந்தர்:

தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வடமாநிலத்தில் வதந்தி பரவியதை தொடர்ந்து தமிழக அரசு மற்றும் காவல்துறை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்கும் இடத்திற்கு நேரிடையாக சென்று அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதன் பேரில் விராலிமலை சுற்றுப்பகுதியில் தங்கியிருக்கும் தொழிலாளர்களை சந்தித்து பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம், மேலும் அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் காவல்துறையை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து அவர்களுக்கு தின்பண்டங்கள், குடிநீர் உள்ளிட்டவைகளை டிஐஜி சரவணசுந்தர் வழங்கினார் இதில் காவல் துணை கண்காணிப்பாளர் காயத்ரி உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர் .

Tags : DIG ,Viralimalai ,
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி