×

விராலிமலை அறநிலையத்துறை வணிக கடைகள் வணிகர்களிடம் கருத்து கேட்டு வாடகை நிர்ணயிக்க வலியுறுத்தல்

விராலிமலை, மார்ச் 10: விராலிமலை அறநிலையத்துறை வணிக கடைகள், வணிகர்களிடம் கருத்து கேட்டு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
விராலிமலையில் கட்டிமுடிக்கப்பட்ட அறநிலைய துறைக்கு சொந்தமான வணிக வளாக கடைகளின் ஏலம் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டதால் வணிகர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வாடகையை நிர்ணயம் செய்தபின் ஏலம் நடத்த வேண்டும் என்று வணிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

விராலிமலை முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.52 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வணிக வளாக 16 கடைகளுக்கான ஏலம் அறிவிக்கப்பட்டு இதுவரை மூன்று முறை ஏலம் கேட்க வணிகர்கள் யாரும் வராததால் மூன்றாது முறையாகயும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் முறை ஏலம் அறிவித்திருந்தபோது நிர்வாகம் சார்பில் நிர்ணயம் செய்திருந்த ரூ.2 லட்சம் வைப்பு தொகை திரும்பி தரப்படமாட்டாது என்ற நிபந்தனையை ஏற்காத வணிகர்கள் ஏலத்தை புறக்கணித்தனர். தொடர்ந்து நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்ட இரண்டாவது, மூன்றாவது ஏலத்தில் வணிகர்கள் யாரும் கலந்து கொள்ளாமல் ஏலத்தை புறக்கணித்தனர்.

இதுகுறித்து கூறிய வணிகர் அன்பழகன்: வைப்பு தொகை மற்றும் மாத வாடகையை குறைக்க வேண்டும் என்றும். மூன்று முறை ஏலம் அறிவித்தும் வணிகர்கள் யாரும் கலந்து கொள்ளாததை தேவஸ்தான நிர்வாகம் பகுப்பாய்வு செய்து இது எதனால் என்பதை உணர வேண்டும் என்றும்..அடுத்த முறை ஏலம் நடத்துவதற்கு முன்னதாக வியாபாரிகள், வணிகர்களை அழைத்து அவர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அவர்களின் ஆலோசனையின் பேரில் முன் தொகை மற்றும் வாடகை தொகையை நிர்ணயம் செய்து ஏலம் நடத்த வேண்டும் என்றும். பல லட்சம் செலவில் கட்டப்பட்ட வணிக வளாகம் இரண்டு வருடங்களாக பூட்டப்பட்டு கிடப்பதை உணர்ந்து தேவஸ்தானம் விதித்துள்ள நிபந்தனைகளை தளர்த்தினால்
மட்டுமே வணிக வளாகம் மூலம் அறநிலையத்துறை வருமானம் ஈட்ட முடியும் என்கின்றனர் வணிகர்கள்.

Tags : Viralimalai ,
× RELATED இலுப்பூர் அருகே கிராமநிர்வாக அலுவலரை தாக்கி செல்போன் பறிப்பு