×

பெரம்பலூர் நகரில் ஆளில்லாத 3 வீடுகளில் கொள்ளையர்கள் ஒரே பாணியில் கைவரிசை

பெரம்பலூர்,மார்ச்10: பெரம்பலூர் நகராட்சியிலு ள்ள வடக்குமாதவி ரோடு, அம்மன் நகர், 2வது குறுக் குத் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம் மகன் ஞானசேக ரன்(45). இவரது மனைவி பெயர் ரமா பிரபா (41). இவ ர்களுக்கு மோனிஷா(12), கவினி(8)ஆகிய 2மகள்கள் உள்ளனர். ஞானசேகரன் இத்தாலி நாட்டில் எலக்ட்ரீ சியனாகப் பணிபுரிந்து வ ருகிறார். வீட்டில் மனைவி ரமாபிரபா,மகள்கள் மோனிஷா, கவினி ஆகியோர் மட் டும் வசித்து வருகிறார்கள். கடந்த 4ம் தேதி ரமாபிரபா குழந்தைகளுடன் கோயம்புத்தூரில் உள்ள தனது தங் கை சரண்யாவீட்டிற்குச் செ ன்றுவிட்டு, அங்கிருந்து லா ல்குடியிலுள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். இந்நிலையில் நேற்று 9ம் தேதி எதிர்வீட்டில்வசிக்கும் நல்லேந்திரன் என்பவர் ஞா னசேகர் வீட்டின் கதவு திற ந்து இருப்பதைப் பார்த்து ரமாபிரபாவிற்கும், காவல் துறைக்கு தகவல்தெரிவித் துள்ளார்.

தகவல் அறிந்து வந்துபார்த்த ரமாபிரபா,வீட் டின் பீரோவில் வைத்திருந் த மோதிரம், தோடு, காயின் என 9 கிராம் பவுன் திருடு போனது தெரியவந்துள் ளது.இதனைத்தொடர்ந்து பெர ம்பலூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகேசன், எஸ்ஐ சண்முகம் ஆகியோர் நேரி ல் சென்று விசாரணை நட த்தினர். காவல்துறையின் விரல் ரேகை பிரிவு மற்றும் மோப்பநாய் பிரிவு நேரில் வந்து தடயங்களை சேகரித் துச்சென்றனர். வீட்டின் பூட் டை உடைத்துத் திருடவந்த கொள்ளையர்கள் விபரமாக, வீட்டின் முன்புறத்தில் உள்ள சிசிடிவி கேமரா முக ப்புகளில் கருப்பு கலர் ஸ்பி ரேவை அடித்து தங்களது முகங்கள் பதிவாகாமல் இ ருக்க முயன்றுள்ளது தெரி யவந்துள்ளது போலீசாரை ஆச்சர்யப் படுத்தியது.

2வது சம்பவம் : பெரம்பலூர் 4ரோடு அருகே அரியலூர் சாலையில் உள் ள அன்பு நகரில் வசிப்பவர் நல்லதம்பி மகன் வசந்த் (27). அருமடல் பிரிவு ரோடு அருகே சரோஜா கிரஷர் வைத்து நடத்தி வருகிறார். இவரது அம்மா பெயர் கலைச்செல்வி(50), மனைவி சுமித்ரா(23), மகள் சிவ நேத்ரா(ஒன்றரை வயது) ஆகியோர் ஒன்றாக வசித் து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 8ம்தேதி காலை 11 மணியளவில் தனது உறவினர் திருமணத்திற்காக வசந்த் தனது குடும்பத்துடன் காங்கேயம் சென்றுள்ளார். நேற்று காலை 8.20 மணிக்கு வசந்த் வீட்டின் அருகில் வசிக்கும் காமராஜ்(47) என் பவர் வசந்தின் வீட்டு கதவு திறந்து இருப்பதைபார்த்து வசந்திற்கும் காவல்துறை க்கும் தகவல் சொல்லி உள்ளார்.

சம்பவ இடத்திற்கு பெ ரம்பலூர் போலீஸ் எஸ்ஐ சண்முகம் நேரில் வந்து வி சாரணைநடத்தினார். காவ ல்துறையின் விரல் ரேகை பிரிவு மற்றும் மோப்பநாய் பிரிவு நேரில்வந்து தடயங் களை சேகரித்துச் சென்ற னர். வசந்த்வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ25ஆயிரம் திருடுபோனது தெரியவந் துள்ளது. 3வது சம்பவம்: பெரம்பலூர், எளம்பலூர் ரோடு, தங்கம் நகரைச் சேர் ந்தவர் சுப்பிரமணியன் மகன் முத்தையா(63). இவ ரது மனைவி அடைக்கம்மை. இவர்களது 2 மகன்க ளில் சுப்பிரமணியன் பங் களாதேஷ் நாட்டிலும், பழ னியப்பன் அரபு நாட்டின் அபுதாபியிலும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நி லையில் முத்தையாவும் அடைக்கம்மையும் கடந்த 24ம் தேதி வீட்டை பூட்டி விட்டு காசிக்குச் சென்று விட்டனர்.

இவர்களது வீட்டில் கடந்த ஒரு வருட காலமாக பெரம்பலூர் வடக்குமாதவி ரோடு, மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த செந்தில் மனைவி மகாலட்சுமி(39) என்பவர் வீ ட்டுவேலை செய்து வருகி றார்.முத்தையாவும், அ டைக்கம்மையும் காசிக்குச் சென்றபிறகும் மகாலட்சுமி தினமும் வீட்டிற்குவந்து வீட் டின் முன்புள்ள செடிகளுக் குத் தண்ணீர் விட்டுச் செல் வார். அதே போல் நேற்று முன்தி னம் (8ம்தேதி) காலை 8 மணிக்கு செடிகளுக்குத் த ண்ணீர்விட்டு சென்றுவிட் டார்.மீண்டும்:நேற்று(9ம் தேதி)மதியம் 3.30மணிக்கு செடிகளுக்கு தண்ணீர் விட வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து இருந்ததைப் பார்த்து, வீட்டின் உரிமையாளர் முத்தையாவுக் கும், பெரம்பலூர் போலீசா ருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதில் வீட்டின் உரிமையாளர் முத்தையா விடம் தொலைப் பேசியில் பேசியபொழுது வீட்டில் உண்டியல் பணம் ரூபாய் 5ஆயிரத்தில் இருந்து 10ஆ யிரத்திற்குள்இருக்கும் என் று கூறியுள்ளார்.
வீட்டில் உள்ள சிசிடிவி கேம ராவில் கருப்பு கலர் ஸ்பி ரே அடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர் தங்களைப் பற்றிய அடையாளம் தெ ரியாதிருக்க வீட்டில் இருந்த சிசிடிவி டிவிஆரையும் எடு த்துச்சென்றுவிட்டனர். பெர ம்பலூர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்திச் சென்றனர். பெரம்பலூரில் நேற்று நடந்த 3 கொள்ளை சம்பவங்களிலும் கொள் ளையர்கள் ஆளில்லா வீடு களை கண்டுபிடித்து கொ ள்ளையடித்திருப்பதுவும், ஒரே பாணியில் சிசிடிவி கேமராவில் கருப்பு ஸ்பிரே அடித்திருப்பதுவும் 3இடங்க ளிலும் ஒரே ரகக் கொள் ளையர்கள் கைவரிசையை க் காட்டியிருப்பது தெரியவ ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி