×

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வுப்பணிகளில் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர், உறுப்பினர்கள் 1000 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்

பெரம்பலூர்,மார்ச்.10: பெரம்பலூர் மாவட்டத்தில் உயர் நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபட வுள்ள ஆசிரியர்களுக்குப் பள்ளிகளை குலுக்கல் மு றையில் ஒதுக்கீடுசெய்யும் பணியை . மாவட்டகலெக்டர் கற்பகம் துவக்கி வைத்து பேசுகையில், தேர்வு ப் பணிகளில் தேர்வறைக் கண்காணிப்பாளர்கள், நிலையான பறக்கும் படை யினர், பறக்கும் படை உறுப் பினர்கள் என சுமார் 1000 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உயர் நிலை மற்றும் மேல் நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களு க்கு பள்ளிகளை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று பெரம்ப லூர் எளம்பலூர் சாலை யில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெரம்பலூர் மா வட்டமுதன்மை கல்வி அலு வலர்அறிவழகன் தலை மையில் நடைபெற்றது.

இந் தப்பணிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் துவக்கி வைத்துப் பேசியதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு பொ துத்தேர்வுகளில் பத்தாம் வகுப்பிற்கு143பள்ளிகளை ச்சேர்ந்த 4,288 மாணவர்க ளும், 3,905 மாணவிகளும் என மொத்தம் 8,193 மாண வ,மாணவியர் மொத்தம் 41 மையங்களில் தேர்வெழுத உள்ளனர். பதினோராம் வகுப்பிற்கு 80 பள்ளிகளை ச் சேர்ந்த 3,692 மாணவர்க ளும், 3,605 மாணவிகளும் எனமொத்தம் 7,297 மாணவ மாணவிகளும், பன்னிரண் டாம் வகுப்பிற்கு 79 பள்ளிக ளைச்சேர்ந்த 3,906மாணவ ர்களும், 3,749 மாணவிகளு ம் எனமொத்தம் 7,655 மாண வ மாணவிகள் 33 தேர்வு மையங்களில் பொதுத்தேர் வைஎழுதவுள்ளனர். தேர்வு ப் பணிகளில் தேர்வறைக் கண்காணிப்பாளர்கள், நிலையான பறக்கும் படை யினர், பறக்கும் படை உறுப் பினர்கள் என சுமார் 1000 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்க ளிலும் போதிய அடிப்படை வசதிகள்,மாணவர்கள் தேர் வு மையங்களுக்கு எளிதில் சென்றுவரபோதுமான பஸ் பேருந்து வசதிகள், வினாத் தாள்கள் மற்றும் விடைத்தா ள்களைப் பாதுகாப்பாக கொண்டு செல்ல போதிய காவல்துறையினரின் பாது காப்பு வசதிகள் என அனை த்தும் மாவட்டநிர்வாகம்சார் பில் ஒருங்கிணைக்கப்பட் டு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பெரம்பலூர் மாவட்டம் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மற் றும் இரண்டாம் இடம் பிடித் ததற்கு பின்னால் எத்தனை ஆசிரியர்களுடைய அயரா த உழைப்பும், அர்ப்பணிப் பும்இருக்கும்என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால் அந்தத் தேர்ச்சியி னை பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்களை சிலர் பரப்பிவருகின்றனர் அவர்களைக் கண்டறிவது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனத்
தெரிவித்தார்.நிகழ்ச்சியின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், தே ர்வுகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள நிர்வா க அலுவலர் முத்தையா, மா வட்ட கல்வி அலுவலர்கள் சண்முக சுந்தரம், குழந்தை ராஜன் மற்றும் ஆசிரியர் கள் உடனிருந்தனர்.

Tags : Perambalur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...