ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கடையம் கூட்டுறவு வங்கியில் புதிய கட்டிடம்

கடையம், மார்ச் 10:  கடையம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.19 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் அடிக்கல்நாட்டினார். கடையம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் விவசாய பயன்பாட்டிற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர்  சிவபத்மநாதன்,  அடிக்கல்நாட்டி கட்டுமானப் பணிகளைத் துவக்கிவைத்தார்.

இதில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் கடையம் தெற்கு ஜெயக்குமார், வடக்கு மகேஷ் மாயவன், மாவட்ட துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி கோதர்மைதீன், ஒன்றிய அவைத்தலைவர் கே.பி.என். சேட், சசிகுமார், முருகன், அரவிந்த், புகாரிமீராசாகிப், மகேஷ், மகேந்திரன், மாரியப்பன், சதாம், சுப்பையா, பகவதி, சிங்ககுட்டி, முருகன், செல்வராஜ், பாண்டியன், கூட்டுறவு வங்கித்தலைவர் ஆதிமூலம்,  பேரூர் அவைத்தலைவர் அல்லாபிச்சை, பேரூர் செயலாளர் அழகேசன், துணைச் செயலாளர்கள் ஆர்எஸ் பாண்டியன்,  சகுந்தலா, பேரூர் கவுன்சிலர் சக்தி சுப்பிரமணியன், ஒலி, மகளிரணி பாண்டிராணி, ஜெய்லானி, எஸ்.முருகன், மாவட்ட பிரதிநிதி பெருமாள்,

இளைஞர் அணி முன்னாள் மாவட்ட துணை அமைப்பாளர் சேர்மசெல்வன், மக்கள் ஜனநாயக மனித உரிமை கழக மண்டல தலைவர் அற்புதராஜ், கீழக்கடையம் பஞ். துணைத்தலைவர் துரைசிங்,  லட்சுமணன் என்ற ராசுகுட்டி, ஆட்டோ ராசுக்குட்டி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜஹாங்கீர், ரம்யா, சுந்தரி, கோமதி, புஷ்பராணி, சங்கர் ,ஒன்றிய துணை செயலாளர் பிரம்மநாயகம், முன்னாள் ஒன்றிய இளைஞரணி தங்கராஜா, அடைச்சாணி ஊராட்சி  தலைவர் மதியழகன், ஐந்தாம் கட்டளை  ஊராட்சி  துணைத்தலைவர் சுதன், ராம்ராஜ், கானா முருகன், கபாடி மகேஷ், ஏ.பி.என். குணா, சங்கராம் ,விஜித், ராஜேஷ் ,  கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சுசிலா, செயலாளர் ராஜ், இயக்குநர்கள் புனித ஆனந்தி, ஒளிவு, சங்க பணியாளர்கள் பரமசிவன், முருகையா, கிருஷ்ணலதா, சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் அன்னை இந்திரா மகளிர் குழு தலைவி சீதாலட்சுமி நன்றி கூறினார்.

Related Stories: