மாசி மக பிரமோற்சவ பெருவிழா நந்தி நாதேஸ்வரர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

நாகப்பட்டினம், மார்ச் 10: மாசி மக பிரமோற்சவ பெருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி அருகே வடக்கு பொய்கைநல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. வேளாங்கண்ணி அருகே வடக்குபொய்கை நல்லூரில் நந்தி நாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மாசிமக பிரமோற்சவ விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.

நந்திநாதேஸ்வரர், சௌந்தரநாயகிஅம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் பக்தி பாடல்களை பாடினர். இதனையடுத்து, மகாதீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை தொடர்ந்து வர்ண வினாயகர் கோயிலில் இருந்து பெண்கள் சீர்வரிசை தட்டுக்களை எடுத்து வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: