காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம்: ராஜபாளையம் ஜவகர் மைதானம் அருகே ராஜபாளையம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அதானி குழுமத்திற்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர் மன்ற உறுப்பினருமான சங்கர்கணேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்திமோகன், சிவசுப்ரமணி, ரவி ராஜா, பால்கனி மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: