×

பெரியகுளம் பகவதி அம்மன் கோயில் திருவிழா தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகள் பழமையான பகவதி அம்மன் கோயில் உள்ளது. மாசி மாதம் 3 நாட்களாக திருவிழா நடைபெறும். நேற்று முன்தினம் பெண்கள் கரகம் எடுத்து இரவு முழுவதும் வீதி உலா சென்று திருவிழா தொடங்கியது. 2ம் நாளான நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்க்ள தீச்சட்டி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. பெரியகுளத்தில் வடகரை பகுதிகளின் முக்கிய வீதிகளில் ஆடியவாறு இளைஞர்கள் தீச்சட்டி எடுத்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின் பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து வழிபட்டு சென்றனர். இதில், தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை ஆகிய தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவிற்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Periyakulam ,Bhagavathy Amman temple festival ,
× RELATED திடீரென நீர்வரத்து அதிகரித்ததால்...