ராமநாதபுரம்: மண்டபம் ஒன்றியம் செம்படையார்குளம் தொடக்கப்பள்ளி இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் சார்பில் உலக மகளிர் தின விழா, இல்லம் தேடிக் கல்வி இரண்டாமாண்டு தொடக்க விழா, பள்ளி விளையாட்டு விழா நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித் திட்ட அலுவலர் கர்ணன் தலைமை வகித்தார். செம்படையார்குளம் ஊராட்சி தலைவர் கண்ணம்மாள் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை விமலா வரவேற்றார். மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் லியோன் உலக மகளிர் தின வாழ்த்துரை வழங்கினார். வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ததேயு ராஜ் இல்லம் தேடிக் கல்வியின் ஒராண்டு சாதனை குறித்து பேசினார். தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தின சேகர் பரிசு வழங்கினார்.விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் வனிதா பரிசு வழங்கினார்.