×

விபத்தில் கொத்தனார் பலி

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சீனாங்குடியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(40). கொத்தனார். இவர், நேற்று முன்தினம் இரவு ஆர்.எஸ்.மங்கலத்தில் வேலை செய்து விட்டு டூவீலரில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பியபோது, அழிந்திக்கோட்டை பஸ் ஸ்டாப் அருகில் நின்றிருந்த ஜேசிபி மீது மோதினார். இதில் தமிழ்ச்செல்வன் கீழே விழுந்ததில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து இறந்தார். இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Mason ,
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை