×

துணைத்தலைவர் புகார் எதிரொலி எடப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை

குன்னூர்:  நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது எடப்பள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஒன்பது வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சியில் தலைவராக  திமுகவை சேர்ந்த முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். துணைத்தலைவராக அதிமுகவை சேர்ந்த கோபால் ராஜ் இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுக வை சேர்ந்த கோபால்ராஜ்  பஞ்சாயத்து  நிதிகளில்  கையாடல் மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது எனக்கூறி பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு துணை தலைவருக்கான அதிகாரத்தை மாவட்ட நிர்வாகம் பறித்தது. அதில் இருந்து பெயரளவில் மட்டுமே துணை தலைவராக கோபால்ராஜ் இருந்து வருகிறார். தனது அதிகாரத்தை பறித்ததன் காரணமாக எடப்பள்ளி ஊராட்சி தலைவர் மீது பல்வேறு புகார்களை தொடுத்து வருகிறார்.  சமீபத்தில்  துணை தலைவர் கோபால்ராஜ்  எடப்பள்ளி ஊராட்சியின் தலைவர் மீது புகார் அளித்துள்ளார்.

நேற்று குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. தலைவர் மற்றும் துணை தலைவர் ஒன்றாக செய்த பணிகள் மற்றும் அதற்கான ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடைபெற்றது. இதற்கான அறிக்கை விரைவில் சமர்பிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், துணை தலைவர் அதிமுகவை சேர்ந்த கோபால் ராஜ் தனது அதிகாரத்தை பறித்ததன் காரணமாக தலைவர் முருகன் மீது இது போன்ற புகார்களை அடுக்கி வருவதாகவும். இதனால் பஞ்சாயத்தில் முறையாக பணிகள் நடைபெறுதில்லை என்று கூறியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Edapally ,
× RELATED கெயில் நிறுவனம் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்