பந்தலூர் இந்திராநகர் பகுதியில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு

பந்தலூர்: பந்தலூர் அருகே இந்திரா நகர் பகுதியில் அடிப்படை பணிகள் நிறைவேற்றுவது குறித்து நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பந்தலூர் இந்திராநகர் பகுதியில் அடிப்படை வசதிகளான நடைபாதை மற்றும் தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும்  நடைபெறவில்லை என புகார்கள் எழுந்தது. அதன்படி நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமி மற்றும் கவுன்சிலரும் நெல்லியாளம் நகர திமுக செயலாளருமான சேகர்,பொறியாளர் வசந்தன், கவுன்சிலர் சாந்தி புவனேஸ்வரன் உள்ளிட்டோர் இந்திராநகர் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். நடைபாதை அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெறவுள்ளது எனவும், தெருவிளக்குகள் பாராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்களிடம் தெரிவித்தனர். நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Related Stories: