×

வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா

சோழவந்தான்: சோழவந்தான் அருகே பேட்டை கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சோழவந்தான் பேட்டை கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி செவ்வாய் சாட்டுதலுடன் துவங்கியது.  இதையடுத்து கோயிலில் தினமும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திரு வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து திரளான பக்தர்கள் வைகையாற்றிலிருந்து பால்குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு நேற்று அன்னதானம் வழங்கப்பட்ட நிலையில், மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவடைந்தது.  விழா நாட்களில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை பேட்டை கிராமத்தினர் செய்திருந்தனர்.


Tags : Veeramakaliamman temple festival ,
× RELATED டாஸ்மாக் பார் உரிமையாளரின் தம்பியை...