×

முதல்வர் பிறந்தநாள் விழா மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் கோ.தளபதி எம்எல்ஏ வழங்கினார்

மதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 1000க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை கோ.தளபதி எம்எல்ஏ வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மார்ச் 1ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வகையில் மாநகராட்சி 28வார்டு வட்ட செயலாளர் பவர் மணிகண்டன் ஏற்பாட்டின் பேரில் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ேகாரிப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி பொன்முடியார் பள்ளியில் நடந்த விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமை வகித்து, அப்பள்ளியில் பயிலும் 1000க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நோட்டு மற்றும் புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமை தணிக்கைக்குழு தலைவர் வேலுச்சாமி, உயர்மட்ட செயல்திட்டக்குழு செயலாளர் குழந்தைவேலு, வடக்கு மண்டலத்தலைவர் சரவண புவனேஷ்வரி, கவுன்சிலர் உமாரவி, துணை செயலாளர் மூவேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags : Chief Minister ,
× RELATED முதல்வராக சந்திரபாபு பதவியேற்க உள்ள...