×

பூ வியாபாரிகள் சாலை மறியல்

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி அருகே பூ மார்க்கெட் அமைந்துள்ளது. பூ மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகள் தவிர்த்து ஏராளமான சில்லரை வியாபாரிகளும் பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற சில்லரை வியாபாரிகளுக்கு பூ மார்க்கெட்டுக்குள் வியாபாரம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து சில்லரை வியாபாரிகள் நேற்று திடீரென மாட்டுத்தாவணி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பின்னர் போலீசார் அறிவுறுத்தலை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.



Tags : Florists ,
× RELATED பூ மார்க்கெட் புனரமைப்பு கோவை...