×

பொள்ளாச்சி அருகே காதலித்த சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோவில் பதிவு செய்த வாலிபர் போக்சேவில் கைது

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது வாலிபரும், 17 வயது சிறுமியும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர்.  இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்ற வாலிபர், ஆசை வார்த்தை கூறி  பலாத்கரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  அப்போது அந்த வாலிபர், சிறுமியிடமிருந்து வாங்கிய செல்போனில் பலாத்கார சம்பவத்தை வீடியோ பதிவு செய்தாராம். பின் அந்த பதிவை தனது செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார்.  இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுமியிடம் இருந்த செல்போனை வீட்டிலிருந்த உறவினர்கள் எடுத்துப் பார்த்தனர். அப்போது அதில் பதிவாகி இருந்த வீடியோ காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.  புகாரின் பேரில் நேற்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடந்த சம்பவத்தை, அவர் ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வாலிபர் மீது, சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்திலும், பாலியல் பலாத்கார சம்பத்தை வீடியோ பதிவு செய்ததாவும் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். இச்சம்பவம் பொள்ளாச்சி அருகே பரபரப்பு ஏற்படுத்தியது.



Tags : Pollachi ,Pokse ,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!