×

மாநில கபடியில் முதலிடம் ஒட்டன்சத்திரம் பள்ளி மாணவிகள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்

ஒட்டன்சத்திரம்: தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கபடி போட்டியில் ஒட்டன்சத்திரம் கொசவப்பட்டி அக்சயா அகாடமி பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர். சாதனை படைத்த மாணவிகளை, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வின் போது திமுக ஒன்றிய செயலாளர் தர்மராஜன், பள்ளியின் தாளாளர் மலர்விழிச்செல்வி மற்றும் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்.


Tags : Ottenchatram ,minister ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி