×

ஒட்டன்சத்திரத்தில் நாளை தூய்மைக்கான மக்கள் இயக்கத்தில் கலந்து கொள்ள அழைப்பு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் பொருட்டு தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்களிப்புடன் நாளை 11.03.2023ம் தேதி நடைபெறவுள்ளது. ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், திண்டுக்கல்- பழநி சாலை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், நகர் பகுதிகளிலும் பொது இடங்களை சுத்தம் செய்யும் வகையில் இம்முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டுமென நகராட்சி ஆணையாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.


Tags : Otanchatra ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் கோடை மழையால்...