×

வேடசந்தூரில் வெளிமாநில ெதாழிலாளர்களிடம் டிஐஜி கலந்துரையாடல்

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவில் உள்ளது தனியார் நூற்பாலை இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 151 தொழிலாளர்களும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 251 தொழிலாளர்களும் மற்றும் பீகார், மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு சில தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். நேற்று இந்த நூற்பாலைக்கு வந்த திண்டுக்கல் சரக டிஐஜி அபிநவ்குமார், வடமாநில தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார். பேசினார். அப்போது அவர், இங்குள்ள யாராவது பிரச்னைக்குரிய போலி வீடியோவை பார்த்தீர்களா என்று கேள்வி எலுப்பினார். அதற்கு யாரும் பார்க்கவில்லை என தெரிவித்தனர். மேலும் அவர் கூறுகையில், ‘தமிழ்நாடு அரசும், போலீசும், நூற்பாலை நிர்வாகமும் உங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கும். இங்கு உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது. நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள். போலியான வீடியோக்களை நம்பி பதற்றம் அடையாதீர்கள். பிரச்னைக்குரிய வீடியோக்களை ஷேர் செய்யாதீர்கள். அனைவரும் இங்கு வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ் பேனரில் இருக்கும் போலீஸ் அதிகாரிகளின் நம்பரை செல்போனில் வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனே கூப்பிடுங்கள்’ என்றார். இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நூற்பாலை சீனியர் பொது மேலாளர் ரவி, பொது மேலாளர் சதீஷ்குமார், ஸ்பின்னிங் மாஸ்டர் ரமேஷ், தொழிலாளர் பொறுப்பாளர் மணிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Tags : DIG ,Vedasandur ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி