×

திருப்போரூர் கந்தசாமி கோயில் பிரம்மோற்சவம் நிறைவு திருக்கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் வீதிஉலா: பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோயிலில், திருக்கல்யாண கோலத்தில்  உற்சவர் வீதி உலாவுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்போரூர் கந்தசாமி கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 3ம் தேதியும், 6ம் தேதி சரவணப் பொய்கையில் தீர்த்தவாரி உற்சவமும், தெப்ப உற்சவமும் நடந்தன.

இதனையடுத்து, இறுதி நாள் நிகழ்ச்சியாக கடந்த புதன்கிழமை மாலை வேடர்பரி உற்சவம் நடைபெற்றது. நேற்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு முருகப்பெருமான், வள்ளியை மணம் முடிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பிரம்மோற்சவ விழா நிறைவடைந்து கொடி இறக்கப்பட்டது. மேலும், நேற்று காலை தங்கமயில் வாகனத்தில் மணக்கோலத்தில் முருகப்பெருமான் வீதிஉலா நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள், புதுமண தம்பதிகள் கலந்துகொண்டு மணக்கோல முருகனை வழிபட்டனர்.

Tags : Thiruporur Kandaswamy ,Temple ,Brahmotsavam ,Thirukalyana Kolam ,Sami ,
× RELATED திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு...