பன்னீர்குளத்தில் மக்கள் தொடர்பு முகாம்

கயத்தாறு, மார்ச் 9: கயத்தாறு அருகே உள்ள பன்னீர்குளம்  கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. கோவில்பட்டி ஆர்டிஓ மகாலட்சுமி தலைமை வகித்தார். கயத்தாறு பிடிஓ அரவிந்தன், தாசில்தார் சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை  வகித்தனர். பன்னீர்குளம் பஞ். துணை தலைவர் பொன்னுச்சாமி பாண்டியன் வரவேற்றார். தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ்  கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பயனாளிகளுக்கு விவசாய கருவிகள், இடுபொருட்கள், இலவச வீட்டுமனை பட்டா,  குடும்ப அட்டைகளை வழங்கினார். முகாமில் தூத்துக்குடி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்  அபுல்காசிம், சமூக நலத்துறை  தாசில்தார் ஐயப்பன், பன்னீர்குளம் பஞ். தலைவர் பேச்சியம்மாள்,   வருவாய் ஆய்வாளர் நேசமணி, வேளாண்மை துறை உதவி இயக்குநர் சுரேஷ், ஊரக வளர்ச்சித்துறை உதவி  செயற்பொறியாளர் ராஜரத்தினம், பொறியாளர்கள் நமசிவாயம், பீர்முகமது,  பன்னீர்குளம் முத்துப்பாண்டி மற்றும் அதிகாரிகள்  கலந்து கொண்டனர். முன்னதாக பல்வேறு துறைகளின் கண்காட்சியை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.

Related Stories: