தேனி: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள சவுராஷ்டிரா கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வீரபாண்டி சவுராஷ்டிரா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் சுருதி தலைமை வகித்தார். ஹீரோ ஸ்டார் கூட்டமைப்பு தலைவர் ஹீரோ ஸ்டார் ராஜதுரை முன்னிலை வகித்தார். விழாவில் ஹீரோ ஸ்டார் கூட்டமைப்பின் சார்பில் சிறந்த பேரூராட்சி சேர்மன் மற்றும் தேனி மாவட்டத்தின் சிங்கப்பெண் விருது வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதாசகிக்கு தமிழ்நாட்டின் முதல் விமானி காவ்யா ரவிக்குமார் வழங்கினார். இவ்விழாவில், சவுராஷ்டிரா கல்வி நிறுவனங்களுக்குட்பட்ட தேனி கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.