பொன்னாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்

உடுமலை:திருமூர்த்திநகர் பொன்னாலம்மன் சோலையில் பொன்னாலம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. வரும் 12ம் தேதி காலை மங்கள இசை, கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், வாஸ்து சாந்தி, தீபாராதனை நடக்கிறது. மாலையில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.13ம் தேதி காலை 2ம் கால யாக பூஜையும், 10 மணியளவில் கோபுர விமான கும்பாபிஷேகமும் நடக்கிறது. முன்னதாக 8.30 மணிக்கு அன்னதானம் நடைபெறும். கும்பாபிஷேகத்தை சேனாதிபதி குருக்கள், செல்வ சுந்தர பகவிதி குருக்கள் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர்.இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Related Stories: