ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த மகளிர் தின விழாவில் பெண்ணுக்கு எல்ஐசி மகளிர் ஊழியர்கள் சார்பில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. திருப்புல்லாணி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சி மகளிர் கூட்டமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா நடந்தது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்தார். கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், கணேஷ் பாபு, ஊராட்சி தலைவர் கோகிலா ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மகளிர் கூட்டமைப்பு நிர்வகிக்கும் வீட்டு சமையல் உணவகம், பழக்கடையை திறந்து வைத்து, மகளிருக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்தார். போட்டிகளில் வென்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது. விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. பாரம்பரிய கலைஞர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.