மகளிர் தின விழா கலந்துரையாடல்

மதுரை:  அரவிந்தர் மீரா கல்வியியல் கல்லூரியில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.  இதில் நடுவராக அரவிந்தர் மீரா யுனிவர்சல் பள்ளி முதல்வர் எம்.குணசுந்தரி, உறுப்பினர்கள் டோக் பெருமாட்டி கல்லூரி ஆங்கில பேராசிரியை சுகா ஜேசுவா, பாத்திமா கல்லூரி ஆங்கில பேராசிரியை கலா, அமெரிக்கன் கல்லூரி உளவியல் துறை பேராசிரியை சிமோனா, பாத்திமா கல்லூரி நிர்வாகத்துறை பேராசியை ராஜி ஆகியோர் குடும்பம், கல்வி மற்றும் வேலைத்திறன்களில் மகளிரின் நிர்வாகத் திறமைகள் என்ற தலைப்பில் கலந்துரையாடினர். இந்நிகழ்ச்சியி்ல மதுரையில் உள்ள 15க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளின் மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இவ்விழாவில் தலைவர் சி.சந்திரன், இயக்குநர் எம்சி அபிலாஷ், துணை இயக்குநர் ஏ.நிக்கிபுளோரா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: