மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகளில் மகளிர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மகளிர் தின விழா சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் மண்டல தலைவர் சுவிதா விமல், மாமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, விஜயா, சிவசக்தி ரமேஷ், ஸ்வேதா சத்யன், எம்பிஆர் ரவிசந்திரன், உசிலை சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தோப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர், நோயாளிகளுடன் இணைந்து மகளிர் தின விழா கொண்டாடினர். இந்த விழாவில் தலைமை மருத்துவர் காந்திமதிநாதன், சுதாமதி ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு அனைவரும் கேக் வெட்டி, நடனமாடி மகளிர் தின விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இதேபோல் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Related Stories: